இந்த அழகு போதாது இன்னும் அழகாக வேண்டும்.. விபரீத முடிவால்.. உயிரை இழந்த ஸ்ரீகாந்த் பட நடிகை..!!

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை ஆர்த்தி அகர்வால். இவர் நடிகர் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து பம்பர கண்ணாலே படத்தில் நடித்திருந்தார். பின் பட வாய்ப்புகள் குறைந்ததால், 2007ஆம் ஆண்டில் கணினி பொறியியலாளர் உஜ்வால் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் உடல் எடை கூடி பருமனாகிவிட்தால் சினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து ஆலோசித்து வந்தார்.

அதற்குள் சென்றுவிட்டீர்களே ஆர்த்தி அகர்வால்: குஷ்பு, சமந்தா, நானி வருத்தம் | RIP Aarthi Agarwal: Tweet celebs - Tamil Oneindia

   

மேலும் அவரின் உடல் எடையைக் குறைத்தால் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் தெலுங்கு பட உலகில் கூறினர். இதனைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரின் பிரபல மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு அறுவைசிகிச்சை செய்து கொண்டார். அதாவது லைப்போ சக்ஷன் எனப்படும் கொழுப்பை உறிஞ்சும் ஆபரேஷன் செய்து கொண்டார்.

Watch Bambara Kannaley Full Movie Online - Download Now

பின்னர் ஆர்த்திக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, சில நாட்களாக அவர் அடிக்கடி மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சையில் இருந்தபோதே அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாகவும், கடந்த 2015ல், தன் 31 வது வயதில் இவ்வுலகத்தை விட்டு ஆர்த்தி பிரிந்தார். இவரை போல் தான் சில நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆப்ரேஷன் செய்து கொண்டு உடல் தோற்றங்களை மாற்றி இப்படி ஒரு ஆபத்தில் மாட்டி கொள்கிறார்கள்.