விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவிக்காத வடிவேலு! மரணத்திற்கு பிறகும் தீராத பகை? கோபமான நெட்டிசன்கள்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி முத்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜயகாந்த். உடல்நிலை குறைவால் இன்று காலை இறந்த விஷயம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் இறப்பிற்கு பிரதமர் மோடியிலிருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரை பல அரசியல்  தலைவர்கள், தமிழ் திரைப்பட பிரபலங்கள் மற்றும் வெளி மாநில  திரைப்பட நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

   

இந்நிலையில் தமிழ் திரையுலகை  பொருத்தவரை விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்காத ஒரே நடிகர் வடிவேலு தான் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.  நடிகர்  வடிவேலு திரையுலக ஆரம்ப கட்டத்தில் இருந்த போது அவரை பல திரைப்படங்களில் தூக்கிவிட்டவர் விஜயகாந்த் தான். விஜயகாந்த் தன்னுடைய படத்திலேயே அவர் வாய்ப்பு வழங்கினார்.அது  மட்டும் இன்றி தான் நடிகர் சங்க தலைவராக இருக்கும்போது அவருக்கு பல உதவிகளையும் செய்துள்ளார்.

ஆனால், இவர்களுக்கிடையே ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சனையின் காரணமாக நடிகர் வடிவேலு விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால்,  விஜயகாந்த் வடிவேலு பற்றி தரைகுறைவாக ஒரு விமர்சனம் செய்யவில்லை. இந்நிலையில் இவர் காலமான தினத்தில் கூட தன்னுடைய வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு விஜயகாந்த் ஒரு இரங்கல் தெரிவிக்காமல் இருப்பது மனிதத் தன்மையற்றது என நெட்டிசன்கள் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர்.

இப்போது கூட ஒரு ஒன்றும் இல்லை நான் விஜயகாந்த் பேசிய தவறு ,அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என்று வடிவேல் ஒரு வார்த்தை தெரிவித்தால் நன்றாக தான் இருக்கும் என்று பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது வடிவேலு இரங்கல் தெரிவிக்காத விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.