
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்ற மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியானது விஜய் டிவியில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே பல சுவாரசியமாக இருந்து வருகிறது , பல திருப்பங்கள் என ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப் மீது சக பெண் போட்டியாளர்கள் கெட்ட வார்த்தையில் திட்டுகிறார் என்றும், பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்.
என சனிக்கிழமை அன்று பல உரிமை குரல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து ரெட் கார்ட் கொடுத்து நடிகர் கமலஹாசன் அவரை வெளியேற்றினார்.பிரதீப் எலிமினேஷன் பிறகு பலரும் பிரதீப் எலிமினேஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதைப் பற்றி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான வனிதா விஜயகுமார் பேசி வருகிறார். அதில் அவர் பிரதீப் ஆண்டனி வாழ்க்கையில் ஏதோ ஒரு மோசமான சம்பவம் நடந்திருக்கிறது. அவர் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். பிரதீப் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை.
கதவை திறந்து வைத்துக்கொண்டு நான் சிறுநீர் கழித்தேன் என்று சொல்கிறான். இன்னைக்கு இப்படி செய்தவன் நாளைக்கு பெண்கள் முன் நிர்வாணமாக நின்று பார்த்துக்கோ… பார்த்துக்கோ… என்ன லவ் பண்ணுங்க.. லவ் பண்ணுங்க.. என்று சொல்ல மாட்டான் என்று என்ன உறுதி இருக்கிறது.பிக் பாஸ்க்கு தகுதியான ஆள் கிடையாது. இந்த விஷயத்தில் கமலஹாசன் எடுத்த முடிவு பாராட்டுக்குரியது என்று பிக் பாஸ் போட்டியாளர் வனிதா இதில் தெரிவித்திருக்கிறார்.