
நடிகை வரலட்சுமி சரத்குமார் அவரது வருங்கால கணவரான நிக்கோலை சச்சுதேவ் என்பவருடன் தாய்லாந்துருக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கோலிவுட் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக ஹீரோயினியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்து வந்த வரலட்சுமி பின்னர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

இமேஜ் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தைரியமாக நடிக்க கூடியவர் விமர்சனங்கள் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் திறமையை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக வைத்திருக்கின்றார்.

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு தற்போது 38 வயதாகின்றது. சமீபத்தில் இவருக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் மார்ச் ஒன்றாம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் மும்பையை சேர்ந்த தொழிலதிபரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வந்தது.

நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது வருங்கால கணவருடன் தாய்லாந்திர்க்கு ஜாலியாக டூர் சென்று உள்ளார்.

அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்து பலரும் கல்யாணத்திற்கு முன்பே ஹனிமூனா என்று கலாய்த்து வருகிறார்கள்.

மேலும் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத வரலட்சுமி என்னை பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி கவலைப்பட மாட்டேன் என்று பதில் அளித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
