
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியான படம் ‘கேப்டன் மில்லர்’ இப்படம் ரிலீசுக்கு முன்னாடி அதிக எதிர்ப்பு இருந்தது. ‘கேப்டன் மில்லர்’ படம் முதல் நாளில் மட்டும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் ‘கேப்டனின் மில்லர்’படம் எழுத்தாளர் மற்றும் நடிகருமான வேல ராம மூர்த்தியின் பட்டத்து யானை நாவலை கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக பல விமர்சனங்கள் வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து வேல ராமமூர்த்தி பேசியுள்ளார். அதில் கேப்டன் மில்லர் படம் பட்டத்து யானை நாவலை பின்னணியாக வைத்து உருவாக்கி உள்ளதாக கேள்விப்பட்டேன்.நான் எழுதிய பட்டத்து யானை நாவலில் ஹீரோ பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்த பின்னர் அதில் இருந்து வெளியே எப்படி சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றான் என்பதுதான் கதை அதை கொஞ்சம் மாற்றி ‘கேப்டன் மில்லர் ‘படமாக எடுத்துள்ளனர்.இதெல்லாம் செய்ய அசிங்கமா இல்லையா இன்னும் உயிருடன் தான் இருக்கின்றேன் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் அனுமதி வாங்கி இருக்கலாம்.
நான் எழுதுவதெல்லாம் எனது ஊர் எனது மக்களின் வாழ்வியல் இதனை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் திருடி விட்டனர். இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் கூட எனது நாவலில் இருந்து சீன்கள் வைக்கபட்டுள்ளதாக தனது வாசகர்கள் வேதனை தெரிவித்திருந்தனர். இப்படி கதையை திருடுபவர்கள் எல்லாம் மனசாட்சியே இல்லாமல் பேசுவார்கள். அப்படியும் ஆதாரத்துடன் கேட்டால் நம்மை அசர வைக்கும் பதில் கூறுவார்கள்.
‘கேப்டன் மில்லர்’ கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து உள்ளேன். புகார் தந்தாலும் வலுத்தவன் பக்கம் தான் நியாயம் பேசுவார்கள். பேர் ஊரு சீக்வன்ஸ் போன்ற வற்றை மாற்றி படத்தை எடுத்திருப்பார்கள்.இது எல்லாம் அவர்கள் தப்பிக்க செய்யும் யுக்திகள். தமிழ் திரையுலகில் இப்படி அடிக்கடி நடப்பது அசிங்கமாக உள்ளது எனக் கூறியுள்ளார், தற்போது இந்த செய்தியானது இணையத்தில் மிகுந்த வைரல் ஆகி வருகிறது.