
தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் வெள்ளித்திரையை போலவே சின்னத்திரைக்கும் நல்ல வரவேற்பு இருக்கின்றது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.
குடும்பப் பெண்கள் படும் இன்னல்களை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் இல்லத்தரசியாக இருக்கும் பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை சிறப்பாக எடுத்துக் காட்டி இருப்பார்கள். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமில்லாமல் சிறகடிக்க ஆசை, நீ நான் காதல், பாண்டியன் ஸ்டோர், மகாநதி உள்ளிட்ட சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.
இந்த தொடரில் லீட் ரோலில் சுசித்ரா பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கணவராக சதீஷ் நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலில் செழியனும் ஜெனியும் பிரிந்து இருந்தார்கள்.
இவர்கள் இருவரும் விரைவில் டைவஸ் செய்து கொள்வார்கள் என்று கதை நகர்ந்து வந்த நிலையில் பாக்கியலட்சுமி எப்படியும் முயற்சி செய்து செழியனையும் ஜெனியையும் சேர்த்து வைத்து விட்டார்.
இந்த சீரியலில் ஜெனியின் அம்மாவாக நடித்து வருபவர் மோனா பத்ரே. கர்நாடகவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் பல படங்களில் நடித்திருக்கின்றார்.
ஏராளமான சீரியல்களிலும் நடித்திருக்கின்றார். மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படத்தில் கண்பார்வை இல்லாத நபராக நடித்திருப்பார்.
40 வயதை கடந்த இவர் தற்போது வரை இளமையாக காட்சியளிக்கிறார். இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகும் வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ…