
இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி சொக்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.
அந்த வகையில் விஜய் டிவியில் 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் ர் நடிகை அறந்தாங்கி நிஷா. இவர் இந்த சீசனில் FIRST ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் புதுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதை தொடர்ந்து தமிழில் இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, ஆண் தேவதை, கலகலப்பு, திருச்சிற்றம்பலம், போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகை அறந்தாங்கி நிஷா சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது விஜய் டிவி யில் மகளிர் தினம் கொண்டாடி உள்ளனர். அதில் நிஷா ,பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பாக்கியா ,
மகாநதி சீரியல் நடிகை காவேரி விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் கலந்து கொண்டார். தற்போது அந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.