விஜயகாந்த்திற்கும், எம்.ஜி.ஆர்க்கும் இறப்பில் இப்படி ஒரு ஒற்றுமையா… ஷாக்கான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவில் 80 ஸ்களில்  மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் சமீபத்தில் கூட உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று தினம் உடல்நிலை குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 6 .10 மணி அளவில் உயிர் இழந்ததாக தேமுதிக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இவரது மறைவிற்கு  பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த ரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

   

”திருடாதே பாப்பா திருடாதே” என்று குழந்தைகளுக்கு பாடம் எடுத்தவர், ”நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என்று ஏழை மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியவர், ”நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” என்று இளைஞர்களுக்கு உற்சாகமூட்டியவர், அவர் வேறு யாரும் இல்லை மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் தான்.

இவர் நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் சிறந்து விளங்கினார். எம்ஜிஆர் மறைந்து 25 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் தமிழ் சமூகத்தில் இவரது புகழ் இன்னும் குறையவே இல்லை. புரட்சித்தலைவர் என்று அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர் அரசியலில் இறங்கி பல நலத்திட்ட பணிகளை மக்களுக்கு செய்து வந்தார் அதேபோல் நடிகர் விஜயகாந்த் கேப்டன் என்ற வார்த்தைக்கு அர்த்தமுள்ளதாக மக்களுக்கு பல உதவிகளும் வெளியில் காட்டாமல் செய்து வந்துள்ளார் தற்போது அவரின் இடத்தில் எவருமே இனிமே வர முடியாது என உலகமே தவித்து வருகிறது.

கேப்டன் விஜயகாந்த்தை கருப்பு MGR என்று அழைக்கப்பார்கள். அதேபோல் இருவரும் மக்களுக்கு பல நல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தற்போது எம்.ஜி.ஆர் மறைந்த டிசம்பர் மாதத்தில் கேப்டனும் மறைந்துள்ளார். இதை மக்கள் இருவருக்கு உள்ளே இப்படி ஒரு ஒற்றுமையா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.