மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் கேப்டனை குழந்தை போல் பார்த்துக் கொண்ட பிரேமலதா… வைரல் வீடியோ உள்ளே…!!

தமிழ் சினிமாவில் கேப்டன் விஜயகாந்த் என்று தனி ஸ்டைல் இருக்கிறது. வசனங்கள் பேசுவது, காலால் எட்டி உதைத்து சண்டையிடுவது போன்றவற்றால் ரசிகர்களை ஈர்த்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்திருந்தார். நடிகர் விஜயகாந்த், இளமை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

   

அதனைத்தொடர்ந்து அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்று, முன்னணி கதாநாயகனாக உயர்ந்து, கமல் மற்றும் ரஜினிகாந்த்திற்கு போட்டியாக தமிழ் திரையுலகையே கலக்கிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அரசியலில் குதித்த அவர் அதிலும் வெற்றி கண்டார். கடந்த 1990 ஆம் வருடத்தில் பிரேமலதா என்பவருடன் அவருக்கு திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இவர் நேற்றைய தினம் உயிர் இழந்ததாக தேமுதிக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. திருமணமாகி 33 ஆண்டுகள் கடந்த நிலையில், அவரின் இறப்பு வரை அவரின் மனைவியோடு நன்றாக வாழ்ந்து வந்தார். உடல் நலம் சரியில்லாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்ட போதும் அவரின் மனைவி பிரேமலதா அவருக்கு மிகப்பெரிய தூணாக இருந்து, அவரை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொண்டார்.

சொந்த வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கையிலும் அவருக்கு பெரும் உதவியாக இருந்து பார்த்துக்கொண்டார், அவரின் மனைவி. கொரோனா காலகட்டத்தில் கூட வெளியில் செல்ல முடியாத நிலைமையில் வீட்டிலிருந்து அவரது மனைவி கையாலே முடி வெட்டி சேவ் செய்து அனைத்து பணிவிடைகளையும் செய்து உள்ளார்.

Vijayakanth: முடி வெட்டி... ஷேவ் செய்து ஒரு குழந்தை போல் கேப்டனை பார்த்து கொண்ட பிரேமலதா! வைரலாகும் Throw Back வீடியோ!

இந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் மனைவி அவர் மீது மிகவும் அன்பு வைத்துள்ளார் என்பதை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.