
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மறைந்த முன்னணி நடிகர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் உடல்நிலை குறைவால் காலமானார். கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரை வீரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சண்முக பாண்டியன் ‘படைத் தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஐந்து நாட்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையை விஜயகாந்த் உயிரோடு இருந்தபோது ஓகே சொல்லியதாகவும் அதன் பிறகு தான் சண்முக பாண்டியன் நடித்து வருவதாகவும் தெரிகிறது. இந்த படத்தில் மொத்தம் ஐந்து சண்டை காட்சிகள் இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து சினிமாவில் நடித்து விஜயகாந்த் இடத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் சண்முகபாண்டியன் இருப்பதாகவும்.இந்த படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ’நட்பே துணை’ என்ற படத்தை இயக்கிய அன்பு இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு பார்த்திபன் திரைக்கதை வசனத்தை எழுதி உள்ளார்.