விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின்…. கணவர் மற்றும் க்யூட்டான குடும்ப புகைப்படங்கள்…

தொகுப்பாளினிகள் தற்போதெல்லாம் அதிகம் மக்களிடத்தில் பிரபலமாகி அவர்களின் மனதில் நீங்க வண்ணனும் இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வரிசையில் விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா.

   

தற்போது சூப்பர் சிங்கர் ஆங்கராக இருக்கும் பிரியங்கா சமீபத்தில் தனது கேரியரில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார்.

அதனை பலரும் ஒன்றாக கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.சின்னத்திரையில் பிரியங்காவிற்கு தனி ஒரு பெயரும் புகழும் உள்ளது.

இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.

விஜய் டிவி டிடிக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தமான ஆங்கர் ஆக இருப்பவர் பிரியங்கா தான்.

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்ற நிலையில் இவர் பற்றி சில நெகடிவ் கமெண்ட் களும் வந்தன.

அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் அந்த நெகடிவ் கமெண்ட்கள் அனைத்தும் இவரை பின்தொடர்ந்தது.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதை சரி செய்து கொண்டு தன்னுடைய பெயரை கெட்டு விடாமல் பார்த்துக் கொண்டார் பிரியங்கா.

தற்போது விஜய் டிவியில் தொடர்ந்து தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அந்தந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப உடைகளை அணிந்து கொண்டு வருவதில் கில்லாடி பிரியங்கா.

இதனிடையே பிரியங்கா கடந்த சில வருடங்களுக்கு முன்பு டெக்னீசியனாக பணியாற்றிய பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவர் குறித்து அடிக்கடி பேசி வந்த பிரியங்கா சமீப காலமாக அவர் குறித்து எந்த ஒரு தகவல்களையும் அவர் வெளியிடுவதில்லை.

இதை வைத்து அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக கூட பல வதந்திகள் வெளியாகியது.

சமீபகாலமாகவே பிரியங்கா அதிகமாக தனது தம்பி மற்றும் அம்மாவுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் பிரியங்காவின் கணவர் மற்றும் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.