புது காதலர்… 30 வயதுக்கு மேல் திருமணம் …வைரலாகும் vj ரம்யாவின் வீடியோ..

விஜய் டிவியில் பணியாற்றி வரும் தொகுப்பாளர்களுக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மவுசு உள்ளது.அந்த வகையில் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளர்களின் ஒருவராக  இருபவர்  தொகுப்பாளினி  ரம்யா.சென்னையைச் சேர்ந்தவர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு? உங்களில் யார் அடுத்த பிரபு தேவா,நமம் வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ல்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

   

இவர் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார். தொகுப்பாளினி ரம்யா பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை  அப்ரஜித் என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கல்யாணம் முடிந்து ஒரு வாரத்திலேயே  இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமா ரம்யா  அம்மா வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். அதன் பிறகு  இருவரும்  சட்டப்படி விவாகரத்தும் செய்து கொண்டனர்.

இந்நிலையில்  ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 30 வயதுக்கு மேல் புது காதலரை தேடினால் வரும் பிரச்சனைகள் என குறிப்பிட்டு ஒரு  சில விஷயங்களை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் ‘ஆணியே புடுங்க வேணாம்’ ,’Dating myself’ என tag  செய்து   இருக்கிறார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)