சின்னத்திரை கதாநாயகியுடன் ஜோடி சேரும் கார்த்தி… எந்த சீரியல் நடிகை தெரியுமா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் கார்த்திக்.இவர் mechanical engineering பட்ட படிப்பை படித்தார்.இதை தொடர்ந்து Masters in Business Management பட்ட படிப்பை படித்தார்.மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ‘ஆயுத எழுத்து’ படத்தில்  உதவி இயக்குனராக பணியாற்றினார்.இதை தொடர்ந்து அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

அதன் பிறகு ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.2016ஆம் ஆண்டு வெளியான ‘தோழா’ படத்தின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.இவர் தமிழில்  காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ் ,கைதி சுல்தான், விரும்பன்,பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களின் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம்  ‘ஜப்பான்’ இப்படமானது ரசிகர்கள் எதிர்பார்பை முறியடித்தது.

தற்போது நடிகர் கார்த்தியின் 27வது படம் குறித்து தகவல்கள் வெளியாகி வருகிறது கொண்டிருக்கின்றன. இப்படத்தை இயக்குநர்  பிரேம்குமார் இயக்க உள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவாக உள்ளது. இந்நிலையில் கார்த்தியின் 27 வது படத்தில் கதாநாயகியாக விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் பிரியா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வாத்தி  தான்  நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.