இது கனவா நிஜமா?…. “யார்க்கர் கிங் நடராஜரின் பிறந்தநாளில் நடிகர் அஜித்”…. தீயாய் பரவும் வைரல் போட்டோஸ்…!!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.

   

இப்படத்தின் படப்பிடிப்பு அர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கு இடையில் நடிகர் அஜித்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் தற்போது உடல் நலம் தேறி மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல தயாராகி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித் கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சேலம் அருகே சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த நடராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். தமிழ்நாட்டு பிரீமியம் லீக் மூலமாக ஐபிஎல்லில் கலந்து கொண்டு கலக்கி  வருகிறார்.

யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்-ஆன இவர் தனது பந்து வீச்சால் அணியை ஜெயிக்க வைத்திருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்த நடராஜன் இந்த ஐபிஎல் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலம் வாய்ந்த அணியாக மிரட்டி வருகின்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டியானது நாளை ஹைட்ரபாத்தில் நடைபெறுகின்றது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் முகாமிட்டிருக்கும் சன்ரைசஸ் அணி வீரரான நடராஜன் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இந்த பிறந்த நாளுக்கு நடிகர் அஜித் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தவுடன் கேக் வெட்டி நடராஜருக்கு ஊட்டி விட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கலந்து கொண்டிருக்கிறார்.

அப்போது அவர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.