அக்கா மாப்பிள்ளையை மச்சினிச்சி செய்யும் குசும்பை பாருங்க… கொங்கு நாட்டு வாழ்க்கையே சொர்க்கம் தான் போலயே.. நீங்களே பாருங்க..!

திருமணம் என்பது இரு மனங்களை மட்டும் இணைக்கும் வைபோகம் இல்லை. இரு குடும்பங்களையும் இணைக்கும் உன்னத சங்கமம் அது. மனம் ஒத்துப்போய் இரு குடும்பங்கள் இணைவது தான் திருமணம். இந்தத் திருமணங்களில் தாலி முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

   

இந்துக்களைப் பொறுத்தவரை திருமணத்தில் தாலி கட்டிக்கொள்வதுதான் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்காகவே முகூர்த்த நேரம் பார்த்து தாலிக் கட்டிக் கொள்கின்றனர்.

அதேநேரம் முகூர்த்த நேரம், தாலியை எல்லாம் தாண்டி ஒவ்வொரு பகுதியிலும் திருமணத்திற்கென சில பிரத்யேகத் தன்மைகள் இருக்கிறது. அதில் மிக முக்கியமானது கோவை, திருப்பூர், ஈரோடு, காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதிகளை உள்ளடக்கிய கொங்குநாட்டுத் திருமணங்கள்!

இதில் அப்படி என்ன விசேசம் எனக் கேட்கிறீர்களா? கொங்கு நாட்டில் திருமணம் முடிந்ததுமோ, அல்லது மாப்பிள்ளை முதன் முதலில் பெண் வீட்டுக்கு வரும்போதோ மச்சினிகள் மாப்பிள்ளையிடம் விளையாடுவார்கள்.

கூடவே பாடல் பாடியும் அசத்துவார்கள். இதற்கு கடைசியில் மாப்பிள்ளை பணத்தை சீர் முறையில் கொடுக்கும் வழக்கமும் இருக்கிறது. அதில் மாப்பிள்ளை அழைப்பில் ஆரத்திப் பாட்டுதான் ரொம்ப பேமஸ். இங்கே ஒரு மச்சினிச்சி என்னவெல்லாம் சொல்லி ஆரத்தி எடுக்கிறார் பாருங்க…

இந்தப் பாடலின் இறுதியில் தங்கக்காசு தாங்க மச்சான்..எங்க தட்டில் நிறைங்க மச்சான். ஜி பே பண்ணுங்க மச்சான் போன் பேயும் சம்மதம் மச்சான்…கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எதுனாலும் ஒகே மச்சான் என மச்சினிச்சி கறார் காட்டுகிறார். இந்தக் காட்சி இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. நீங்களே பாருங்கள்…