அடடே…. ரம்பாவும் குஷ்புவும் இப்படி ஒரு நண்பர்களா?…. இணையத்தை தெறிக்க விடும் க்யூட் புகைப்படம் இதோ….!!!

தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

   

இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு.

இவரைப் போலவே இந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கில் வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். அதனைப் போலவே தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

இவர் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இலங்கைத் தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் தமிழில் வெளியான மின்சார கனவு படத்தில் குஷ்பூ மற்றும் ரம்பா இருவரும் ஒன்றாக இணைந்து நடைத்திருப்பார்கள். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அன்று முதல் இன்று வரை குஷ்பூ மற்றும் ரம்பா இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றன.

இவர்கள் சமீபத்தில் தங்கள் குழந்தைகளுடன் ஒருவரை ஒருவர் சந்தித்து கட்டித்தழுவிக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக் செய்து இவரின் நட்புகளை பாராட்டி கமாண்ட் செய்து வருகிறார்கள்.