யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆபத்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீழ்த்துவது என பல யுக்திகளை யானைகள் கையாளும் இதை எல்லாம் பார்க்கும் போது மிக ஆச்சரியமாக இருக்கும்.குட்டி யானைகள் விளையாடுவதை பார்பதற்கே மிக அழகாக இருக்கும்.சமூகவலைத்தளங்களில் க்யூட் வீடியோக்கள் எல்லாம் பெரும்பாலான வீடியோக்களில் யானை இருக்கும் அந்த அளவிற்கு குறும்பு, சேட்டை உள்ளிட்ட குணங்களை கொண்டது யானை.
அப்படியாக சமீபத்தில் தனியாக வந்த யானை செய்த செயல் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக Sheldrick Wildlife என்ற அமைப்பு விலங்குகளை கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் தனித்து விடப்பட்ட யானையை கண்காணித்து அதற்கு தேவையானவைகளை செய்து வந்தது. அதற்காக தண்ணீர் பைக் அமைத்து கொடுத்திருந்தது.
பொதுவாக யானைகள் தண்ணீரை தன் துதிக்கையில் நிரப்பி பின்னர் அதை வாயில் வைத்து குடிக்கும் இதை தான் நம் எல்லோரும் பார்த்திருப்போம் ஆனால் வைரலாகி வரும் வீடியோவில் யானை நேராக பைப்பை தன் துதிக்கையால் எடுத்து அதை வாயில் வைத்து தண்ணீரை குடிக்கிறது.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Rescued orphan Lemeki is taking the lazy (read: sensible) approach to drinking. She is an orphan in our care that was saved from a raging river. To see her now, with her stubby tusks poking through, is a reminder of how far she’s come: https://t.co/41gbnvwpt9 pic.twitter.com/NesFpe0Wkp
— Sheldrick Wildlife (@SheldrickTrust) June 2, 2021