அடேங்கப்பா வெங்கட் பிரபுவின் மற்றும் மகள் ஷிவானியா இது? வாயடைத்துப்போன ரசிகர்கள்

இயக்குனர் வெங்கட் பிரபு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.ஆரம்பத்தில் நடிகராக இருந்த வெங்கட் பிரபு பின்னர் “சென்னை 28” மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார். இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2000 ஆம் ஆண்டு நடன ஆசிரியை சரசா என்பவரின் வளர்ப்பு மகளான ராஜலக்ஷ்மி என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார்.

   

திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஷிவானி என்ற மகளும் பிறந்தார். சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகள் ஷிவானி தனது 16 வது பிறந்தநாளை கொண்டாடினர். தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாழ்த்துக்களை தெரிவித்த வெங்கட் பிரபுவின் பதிவில் பல்வேறு நடிகர்களும் ஷிவானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.எனினும், சிலரோ வெங்கட் பிரபுவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.