அட இவர்தான் நடிகை ராதாவின் மகனா?… பலரும் பார்த்திடாத UNSEEN புகைப்படம் இதோ…

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவரான நடிகை ராதாவின் மகன் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகளில் ஒருவர் நடிகை ராதா. இந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த கமல் மற்றும் ரஜினி உடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடித்து பிரபல நடிகை ஆக வலம் வந்தார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின்  ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

   

இவர் தான் நடிக்க வந்த 6ஆண்டுகளில் 100 படங்களுக்கும் மேல் நடித்தது மட்டும் அல்லாமல் பத்தாண்டுகளில் 162 படங்களுக்கு மேல் நடித்து சாதனையும் புரிந்துள்ளார். இதை தொடர்ந்து 1991ல்  ராஜசேகரன் என்பவர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை ராதாவிற்கு கார்த்திகா, துளசி, விக்னேஷ் என இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.முதல் மகள் கார்த்திகா ஜீவா உடன் ‘கோ’ படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு கதை தேர்வில் சொதப்பி சிறந்த கதைகளை தேர்வு செய்யாமல் சினிமாவில் இருந்து விலகினார்.

இவரை தொடர்ந்து இளைய மகள் துளசி 14 வயதிலேயே மணிரத்தினம் இயக்கிய  ‘கடல்’ படத்தில் அறிமுகமானார் அதன் பிறகு ஜீவாவுடன் ‘யான்’ படத்தில் நடித்தார். இந்த படமும் தோல்வியடைந்ததால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, படிக்க சென்று விட்டார். ஆனால் அவருடைய மகன் சினிமாவில் இதுவரை கால்பதிக்கவில்லை.

தற்பொழுது நடிகை ராதா தனது மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….