அட இவர்தான் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் அக்காவின் கணவரா?…. தீயாய் பரவும் புகைப்படம் இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா உடைய கணவரின் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013ல் வெளியான ‘கீதாஞ்சலி’ என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

   

நடிகர் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்பொழுது விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் மிஸ் இந்தியா, பெண் குயின்,சாவித்ரி  போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.

தற்பொழுது கோலிவுட் மற்றும் ஹாலிவுட் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதே போல ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘சைரன்’ திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இதை தொடர்ந்து தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் என்பதே நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. நடிகை கீர்த்திக்கு ரேவதி எனும் ஒரு அக்கா உள்ளார். தற்பொழுது நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி சுரேஷின் கணவருடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…..