‘அப்பா’ படத்தில் நடித்த சின்ன பையனா இது?…. ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி  மாறிட்டாரே!… புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்…

இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘அப்பா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் நசாத்தின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

‘அப்பா’ திரைப்படத்தை சமுத்திரக்கனி தானே இயக்கி அதில் நடித்தும் உள்ளார். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் மூன்று குடும்பங்களில் வித்தியாசமான சூழலில் வாழும் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

   

சமுத்திரக்கனியின் மகனாக நடிகர் விக்னேஷ் என்பவரும், தம்பி ராமையாவின் மகனாக நடிகர் ராகவ் என்பவரும், நமோ நாராயணனின் மகனாக நடிகர் நசாத்தும் நடித்திருந்தனர். இந்த படத்தில் சமுத்திரக்கனி ‘தன் மகனுக்கு எது சரி என்று படுகிறதோ அது அப்பாகிட்ட சொல்லாதே நீயே முடிவெடு. எது தப்புன்னு தோணுதோ அதை மட்டும் அப்பா கிட்ட சொல்லு’ என்று முழு சுதந்திரம் அளிக்கின்றார்.

இவ்வாறு தன் குழந்தையை அவர் வளர்க்கிறார். இன்னொரு தந்தையான நமோ நாராயணன் தன்மகன் நாசத்திற்கு ‘டேய் நாம் நாமே எந்த வம்பு தும்புக்கும் போகக்கூடாதுடா. நம்ம இருக்கிற இடமே தெரியாமல் இருக்கணும்’ என்று சொல்லி தன் குழந்தையை வளர்க்கிறார்.

அடுத்த தந்தையான தம்பி ராமையா தன் மகன் ராகவ்வை ‘கருவில் இருந்தே தன் மகன் டாக்டர் என்று சொல்லி தன் மகனை மெண்டல் ஸ்ட்ரசுக்கு ஆளாக்குகிறார்.தன் கனவை தன் பிள்ளையின் மீதும் திணிக்கும் அப்பாவாக தம்பி ராமையா செயல்படுகிறார். இதில் நமோ நாராயணன் மகனாக நடித்த நடிகர் நாசத்தின் சமீபத்திய புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இவர் இப்படத்தில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். தற்பொழுது இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அப்பா படத்தில் நடித்த சின்ன பையன் இது?’ என்று கூறி ஆச்சரியத்தில் உள்ளனர்.