விஜய் மற்றும் ஸ்ரேயா கூட்டணியில் 2007ஆம் ஆண்டு வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படம் அழகிய தமிழ் மகன். முதல் முறையாக விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்ததால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது.
அதேசமயம் விஜய் முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு விஜய் ஓட்டப் பந்தய வீரராகவும், இன்னொரு விஜய் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தனர். முதல் முறையாக விஜய் வில்லன் வேடத்தில் நடிக்க முயற்சி செய்தது அவருக்கு தோல்வியை கொடுத்தது.
தற்போது விஜய் வில்லன் வேடத்தில் நடித்தால் செமையாக இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இதே ரசிகர்கள் தான் அன்று அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய்யை வில்லனாக ஏற்றுக்கொள்ளவில்லை.
ஹாலிவுட்டில் வெளியான பைனல் டெஸ்டினேஷன் படத்தின் இன்ஸ்பிரேஷன் ஆக உருவான என்ற படத்தில் ஹீரோ ஹீரோயினை தாண்டி அனைவரது மனதிலும் இடம் பிடித்தது குழந்தை நட்சத்திரத்தில் நடித்த நிவேதிதா என்ற பாப்பா தான்.
தன்னுடைய துறுதுறு நடிப்பாலும், மழலைச் சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தார். அவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது 20 வயதான நிவேதிதா தற்போது துபாயில் செட்டிலாகி உள்ளார்.
2009ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என்பதும் கூடுதல் தகவல். இந்நிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.