ஆத்தாடி….! இவளோ பெரிய மீனா….? கவலைப்படும் உள்ளூர் மக்கள்….. எதற்காக தெரியுமா….? வாங்க பார்க்கலாம்…..!!!!!

சிலி நாட்டில் உள்ள அரிகா என்ற பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பாக கடலுக்கு சென்று மீன் பிடிக்க சென்றனர். அப்போது வலையை வீசி மீனுக்காக காத்திருந்தபோது ஏதோ பிரம்மாண்டமான மீன் ஒன்று வலையில் சிக்கியதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

   

இதன்பின் வலையில் உள்ள சிக்கிய மீனை வெளியே எடுக்க அவர்கள் முயற்சித்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் 16 அடி நீளம் கொண்ட அந்த ராட்சத மீன் சிக்கியுள்ளது. அதை கரைக்கு கொண்டு வந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இத்தனை ஹெரிங்ஸ் ராஜா என்று அழைக்கிறார்கள்.

இது உண்மையிலேயே ஒருவகை மீன் இனம் தான். அதிக நீளம் கொண்டதால் இந்த மீன் இயந்திரத்தின் துணையுடன் தூக்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பொதுவாக இந்த மீன்கள் ஆழ்கடல் பகுதியில் வசிக்கும் வெப்பமண்டல கடல்களில் அதிகமாக காணப்படுகிறது. தென் அமெரிக்காவில் இந்த வகை மீன்கள் சிக்குவதை அங்குள்ள மக்கள் விரும்பவில்லை.

ஏனெனில் இந்த மீனை கெட்ட சகுனமாக கருதுகிறார்கள் உள்ளூர் மக்கள். ஏனென்றால் இந்த மீன் பிடிபட்டால் சுனாமி நிலநடுக்கம் ஆகியவை ஏற்படும் என்று இந்த மக்கள் நம்புகிறார்கள். இருப்பினும் இதற்கு அறிவியல் ரீதியாக எந்தவித சான்றுகளும் இல்லை என்று கூறப்படுகிறது.