ஆத்தாடி….! ஒரிஜினல் யானையே நடந்து வர்றது போல இருக்கே…. யானை வடிவில் ரோபோ…. செம வைரலாகும் வீடியோ….!!!!

மரம் மற்றும் இயந்திரத்தின் மூலம் ரோபோ போலவே யானை ஒன்று செய்யப்பட்டு வீதியில் நடந்து வந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. யானை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். யானையில் சவாரி செய்வது பலருக்கும் பிடித்த ஒன்று. பெரும்பாலும் கோயில்களில் வெளியில் நிற்கும் யானைகள் மீது பல குழந்தைகள் சவாரி செய்ய நினைப்பார்கள்.

   

அது மட்டும் இல்லாமல் காசு கொடுத்து அதனிடம் ஆசிர்வாதமும் நாம் வாங்கிக் கொள்வோம். இப்படி பல நினைவுகளை கொண்டது யானை. தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது . அந்த வீடியோவில் மனிதர்களைப் போலவே ரோபோக்கள் செய்து வந்த நிலையில் தற்போது விலங்குகளுக்கும் ரோபோட் செய்ய தொடங்கிவிட்டார்கள் போல இருக்கின்றது.

யானை போலவே, அது நடப்பது போல மரம் மற்றும் பல கருவிகளை இணைத்து யானை போன்ற உருவமைப்புடன் ஒரு ரோபோட்டை செய்துள்ளார்கள். இதற்குள் சில மனிதர்களும் நிற்கிறார்கள். அவர்களுடன் இணைந்து அந்த யானையும் மெதுவாக எட்டெடுத்து வைத்து நடந்து செல்கின்றது. இது வெளிநாட்டில் உருவாக்கப்பட்டது போல் உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை நீங்களும் பாருங்கள்…