நடிகர் ஆர்யாவை காதலித்த நடிகை அவர் அபர்நிதியின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. சினிமாவுக்காக எப்பேர்பட்ட ரிஸ்க்கையும் எடுக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துக் கொண்டு வருகிறார். நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் செய்து கொண்டார்.
சாயிஷாவும் ஆரியாவும் ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் சினிமாவில் பிசியாகவே வலம் வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ஆர்யாவை காதலித்த நடிகையான நடிகை அபர்நிதியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 2018 இல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ அப்போது திருமணமாகாமல் இருந்த நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக இருந்தது இந்த நிகழ்ச்சி.
இதில் பல பெண்களும் கலந்து கொண்டு பெரும் பிரபலமானவர்கள். பல சர்ச்சைகளை சந்தித்தபோதும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி பெரும் ஹிட் ஆனது. இதில் ஹோம்லியாக வந்து சகப் போட்டியாளர்களின் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தவர் அபர்நிதி. இந்நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு இவர் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக ‘ஜெயில்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தற்பொழுது இவர் ஆளே மாறி கண்ணாடியுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்நிதியா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
வைரலாகும் புகைப்படம் இதோ….