இடிதாக்கி உயிரிழந்த நபர்… வளர்ப்பு நாய் அரங்கேற்றிய பாசப்போராட்டம்! கலங்க வைக்கும் புகைப்படம்

தமிழகத்தில் இடிதாக்கி உயிரிழந்த தனது உரிமையாளரின் உடலை நாய் ஒன்று சுற்றிவந்தது அனைவரின் கண்களையும் கலங்க வைத்துள்ளது.

பெரம்பலூர் பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(55). ஆடுமேய்க்கச் சென்ற இவர் இடிதாக்கி இறந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலை கட்டிலில் கிடத்தி உறவினர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர்.

   

அப்போது ராமச்சந்திரனின் வளர்ப்பு பிராணியான நாய் அவரது உடலை சுற்றியும், தாவி குதித்தும் தனது எஜமானனை இழந்த பரிதவிப்பை வெளிப்படுத்தியது.

தொடர்ந்து ராமச்சந்திரன் உடலை எடுக்கும் வரை ஆற்றுவார் இன்றியும், தேற்றுவார் இன்றியும் அந்த இடத்தை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்தது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.