கோயிலில் கடவுளுக்கு அலங்காரம் தொடங்கி, பெண்கள் தலையில் சூடிக் கொள்வது இவ்வளவு ஏன் மனிதனின் இறுதி ஊர்வலத்தில் கூட பூவே முக்கியத்துவம் பெறுகிறது. பூவை அழகாகக் கட்டுவது கூட பெரும் கலைதான். அதனால் தான் மாணிக்க மாலை என்னும் பூ கட்டுதல் கைவினைக் கலைப் பட்டியலில் உள்ளது.
பெண்களுக்கு பூ சூட்டும்போதே அழகும் வந்து வந்துவிடுகிறது. பெண்பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் அதனால் தினமும் பூ வாங்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால் இன்றைய காலப் பெண்கள் பலருக்கு எப்படி பூ கட்டுவது என்பதே சரியாகத் தெரியவில்லை.
முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு இருக்கும் பெண்கள் மிக்சச்சரியாகவும், நேர்த்தியாகவும் பூ கட்டுவார்கள். ஆனால் அப்படி பூ கட்டத் தெரியாது என்னும் கவலையும் இனி வேண்டாம். இதோ உங்களுக்காக ஈஸியாக பூ கட்ட சூப்பர் டிப்ஸ் இதோ…