இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யாரென்று தெரிகிறதா..? சூப்பர் சிங்கரில் பிரபலமாகி, தற்போது பின்னணி பாடகி ஆகியுள்ளார்..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூ னியர் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தன் அழகிய குரல் மக்களை கவர்ந்தவர் தான் நித்யஸ்ரீ. இவர் விஜய் டிவி சூப்பர் சிங்கர் சீசன் 2வில் பாடுவது மட்டுமல்லாமல் தனக்கென ஒரு யூடியூப் சேனல் தொடங்கி. அதில் தான் பாடும் பாடல்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

இதில் ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், பாடகி நித்யஸ்ரீ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இவர் திரையுலகில் பின்னணிப் பாடகராக தற்போது உள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், சமூக வலைதளங்களில் இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படங்களை பதிவு செய்துவருவார். அந்த வகையில் தற்போது தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…