இந்த புகைப்படத்தில் இருப்பவர் தான், சினிமாவில் உச்சம் தொட்ட பிரபல நடிகையின் அம்மா… யார் தெரியுமா..?

80 -களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை நதியா. நடிப்புக்கு கவர்ச்சி தேவை இல்லை என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு என்று தான் சொல்ல வேண்டும். “பூவே பூச்சூடவா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்டர் ஆனார் இவர். இதற்க்கு முன் சில மலையாள படங்களில் நதியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

மேலும், ராஜாதிராஜா, அன்புள்ள அப்பா, சின்னத்தம்பி பெரிய தம்பி என பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், தற்போது அடடே சுந்தரா, சர்க்காரு வாரி பாட்டா, துருஷ்யம் என கதையின் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை. இந்நிலையில், நடிகை நதியாவின் அம்மா லலிதா-வின் புகைப்படம்,

இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை நடிகை நதியா சில வாரங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். மேலும், நடிகை நதியாவின் அம்மாவின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அதனை ஷேர் செய்து வருகின்றனர். இதோ அவருடைய அம்மாவின் புகைப்படங்கள்..