இந்த புகைப்படத்தில் உள்ள சின்ன குழந்தை யாருன்னு தெரியுமா உங்களுக்கு?… அட இவர் ஒரு பிக் பாஸ் பிரபலமா?….

பிக் பாஸ் 3 இல் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஷெரினின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ், கன்னடம் ,மலையாளம் என பல மொழிகளிலும் எண்ணற்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகை ஷெரின். இவர் ஒரு கன்னட மாடல். படிப்பிற்கு பின் 16 வயதில் மாடலான இவர், அதே வருடத்தில் வெளியான ‘துருவா’ எனும் கன்னட படத்தில் அறிமுகமானார். மேலும் அதே வருடத்தில் ‘தமிழில் துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலமும் அறிமுகமானார்.

   

நடிகர் தனுஷுக்கும் செல்வராகனுக்கும் திருப்புமுனையாக அமைந்த ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் நடிகை ஷெரினுக்கும் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து அவர் விசில், உற்சாகம், நண்பேன்டா, பீமா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். பின்னர் உடல் எடை அதிகரித்த நிலையில் பட வாய்ப்புகள் இன்றி தவித்தார்.

மீண்டும் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த விஜய் டிவி பிரபலமாகியது. இதைத்தொடர்ந்து சிக்கென ஸ்லிம்மான நடிகை ஷெரின் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டு வருகிறார்.

 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷெரினுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும், நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில் பிக் பாஸ் பிரபலமான நடிகை ஷெரினின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…