இந்த மனசு தான் சார் கடவுள்..! தாகத்தில் தவித்த புறாவின் தாகம் தீர்க்க இந்த சிறுவன் செய்ததை பாருங்க.. கண்கலங்க வைத்த காட்சி

சிறுவன் ஒருவன் தனது பால்கனியின் அருகே உட்கார்ந்திருக்கும் ஒரு புறாவுக்கு இரக்கத்துடன் தண்ணீர் வழங்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒரு சிறுவன் தனது பால்கனியின் அருகே உட்கார்ந்திருக்கும் ஒரு புறாவுக்கு இரக்கத்துடன் தண்ணீர் வழங்கும் காட்சிகள் உள்ளது.

   

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள நிலையில், அதில் சிறுவன் ஒருவன் கரண்டியில் தண்ணீரை ஏந்தி புறா ஒன்றிற்கு தாகம் தீர்க்க முற்படுகிறான்.

பால்கனியில் அமர்ந்திருக்கும் சிறுவன் ஒரு கிரில் கேட்டினுள் உள்ளார். ஆனாலும் கேட்டிற்கு வெளியில் தாகத்துடன் அமர்ந்திருக்கும் பறவையை பார்த்து அதற்கு எப்படியாவது தண்ணீர் கொடுத்து விட வேண்டும் என முயற்சி செய்கிறார்.

அதற்காக அவர் ஒரு நீளமான குழி கரண்டியை எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி அந்த தண்ணீர் கீழே சிந்திவிடாமல் மிக பொறுமையாக பறவை அருகே கொண்டு செல்கிறார்.

ஆரம்பத்தில் அந்த புறா சிறுவனை நம்பவில்லை என்று தெரிகிறது, ஆனால் அவன் கையை மேலும் நீட்டும்போது, ​​புறா கரண்டியிலிருந்து தண்ணீர் குடிப்பதைக் காணலாம்.

சிறுவனின் பெயர், மற்றும் விவரங்களை வனத்துறை அதிகாரி வெளியிடவில்லை. அன்பும், இரக்கமும் கலந்த அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.