சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கயல்’ சீரியலில் கயலின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த ஹரி தற்போது சீரியலை விட்டு விலகியுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பி யில் முன்னணியில் இருக்கும் சீரியல் ‘கயல்’. இந்த சீரியலில் கயல் கதாபாத்திரத்தில் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஜா ராணி சீரியல் பிரபலமான நடிகர் சஞ்சீவ் நடித்து வருகிறார். அப்பா இல்லாத குடும்பத்தில் தன் மொத்த குடும்பத்தையும் காக்கும் பொறுப்பை மூத்த மகளாக எடுத்துக் கொண்டுள்ளார் கயல்.
தற்பொழுது பரபரப்பாக சென்று கொண்டுள்ளது இந்த சீரியல். இந்நிலையில் சமீபத்தில் கயலின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சீரியலை விட்டு விலகினார். அதோடு மட்டுமில்லாமல் கயலின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த அவினாஷ் சீரியலை விட்டு விலகினார். இவருடைய கதாபாத்திரத்தை ஏற்று நடிகர் ஹரி அன்பு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வந்தார்.
தற்பொழுது நடிகர் ஹரியும் சீரியலை விட்டு விலகப் போவதாக தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இனிமேல் இவருக்கு பதிலாக நடிகர் ஜீவா அன்பு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் ஜீவா ‘அன்னலட்சுமியும் அன்னக்கொடியும்’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.