பெங்களூரில் வைக்கப்பட்டுள்ள இட்லியை ஏடிஎம் இயந்திரம் வெறும் 12 நிமிடத்தில் 72 இட்லிகள் வரை தயார் செய்து கொடுப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக நாம் ஏடிஎம் மையங்களை பணம் எடுப்பதற்கு பயன்படுத்துவோம். வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் இருப்பதற்காக வங்கியின் கிளைகள் ஏடிஎம் இயந்திரத்தை உருவாக்கினார்கள். இதன் மூலம் நம்மால் எளிதில் பணத்தை நமக்கு அருகில் உள்ள இடத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடிந்தது.
ஆனால் ஏடிஎம்மில் பணத்தை மட்டும் பார்த்த நமக்கு அதில் இட்லி வருவது தான் தற்போது ஆச்சரியமே. இந்த ஏடிஎம்மில் சூடாக இட்லியும் தொட்டுக்கொள்ள பொடி மற்றும் சட்னியும் சேர்ந்து வருகின்றது. இந்த வித்தியாசமான ஏடிஎம் பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் வெறும் 12 நிமிடங்களில் கிட்டத்தட்ட 72 இட்லி வரை சைடிஷம் சேர்த்து தயார் செய்து விடுமாம். சூடான இட்லியை தரும் இயந்திரத்தின் வீடியோவானது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதில் நீங்கள் இட்லியை பெற வேண்டும் என்றால் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும். நீங்கள் ஆர்டர் செய்த இட்லியானது உறுதி செய்யப்பட்டு உங்கள் மொபைலுக்கு ஒரு கோடு வரும். அதை நீங்கள் ஸ்கேன் செய்து உங்களுக்கான உணவை பெற்றுக் கொள்ளலாம். சில மணித்துளிகளிலேயே உங்கள் கைகளில் சுட சுட இட்லி வந்துவிடும். இது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
இதை உருவாக்கிய பொறியாளர் தெரிவித்ததாவது “எனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவருக்கு இட்லி தேவைப்பட்டது. இரவு நேரத்தில் சூடான இட்லியை பெறுவது என்பது எவ்வளவு சிரமம் என நமக்கு தெரியும். ஆனால் இதுபோன்று ஒரு இயந்திரத்தை உருவாக்கி விட்டால் நமக்கு எப்போது வேண்டுமானாலும், அதிலும் அவசர தேவைக்கு நாம் இதை பயன்படுத்தி இட்லியை பெற்றுக் கொள்ள முடியும் என்பதற்காகத்தான் இதனை உருவாக்கினேன்” என அவர் தெரிவித்திருந்தார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ இணையதில் செம வைரலாகி வருகின்றது.
Idli ATM in Bangalore… pic.twitter.com/NvI7GuZP6Y
— B Padmanaban ([email protected]) (@padhucfp) October 13, 2022