இராலை பிடிக்க கடலுக்குள் நீந்திய நபரை விழுங்கிய திமிங்கலம்… பின் நடந்தது என்ன?

அமெரிக்காவில் இராலை பிடிக்கச் சென்ற மீனவரை ராட்சத திமிங்கலம் ஒன்று விழுங்கி, 40 நொடிகள் கழித்து கக்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் Massachusetts மாகாணத்தில், கிட்டத்தட்ட 90 சதவீதம் கடலால் சூழப்பட்ட நகரமான Provincetown-ஐ சேர்ந்தவர் Packard (56).

ஆழ்கடலில் லாப்ஸ்ட்டர் எனும் ராட்சத இறால்களைப் பிடிப்பதையே சுமார் 40 ஆண்டுகளாக தொழிலாக செய்து வரும் இவர், வெள்ளிக்கிழமை காலை, Cape Cod கடலில் லாப்ஸ்ட்டர் டைவிங் செய்துள்ளார்.

அப்பொழுது தன்னை ஏதோ பலமாக பிடித்து இழுந்தது போன்றும், அடுத்த நொடியே அனைத்தும் இருட்டாகவும் மாறியதும் தெரிந்துள்ளது.

குறித்த பகுதியில் சுறா அதிகமாக காணப்படும் என்பதால், தன்னை சுறா விழுங்கிவிட்டதாக நினைத்தவர், பற்கள் எதும் இல்லாமல் இருந்ததால், பின்பு தன்னை விழுங்கியுள்ளது, திமிங்கலம் என்பதை புரிந்து கொண்டுள்ளார்.

தன்னை விழுங்க முயற்சித்து கொண்டிருக்கின்றது என்பதை தெரிந்த நபர், இனி உயிர்பிழைப்பது கஷ்டம் என்று குடும்ப நபர்களை நினைத்துள்ளார். அத்தருணத்தில் திடீரென கடலின் மேற்பரப்பிற்கு வந்துவிட்டார்.

பின்பே திமிங்கலம் வாயிலிருந்து தான் விடுபட்டுவிட்டதாக நினைத்துள்ளார். அவருடன் சென்ற நண்பர்களின் உதவியால் கரைக்கு கொண்டு வரப்பட்ட அவருக்கு உயிர் சேதம் எதும் இல்லை என்று ஒரு காலில் மட்டும் எலும்பு இடம்மாறியுள்ளதும் தெரியவந்துள்ளது.

குறித்த திமிங்கலத்தின் வாயில் சுமார் 30லிருக்கு 40 விநாடிகள் இருந்ததாக கூறியுள்ளார். இது ஒரு Humpback திமிங்கலம் என்றும் இது 50 அடி (15 மீ) வரை வளரக்கூடியது மற்றும் சுமார் 36 டன் எடையுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

திமிங்கலம் தனது வாயை பிளந்து மீன்களை மொத்தமாக பிடிக்கும் முயற்சியில் இருந்த தருணத்தில், தெரியாமல் பெக்கர்ட்டையும் சேர்த்து விழுங்கியிருக்கும். அதனால் அவரை சில நொடிகளிலேயே கக்கியுள்ளது. குறித்த சம்பவம் எதார்த்தமாக நடந்திருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *