பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் சிவின் ஒளித்து வைத்த நகைகளை தனலட்சுமி கண்டுபிடித்து விடுகிறார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது வெற்றிகரமாக 38 நாட்களை கடந்துள்ளது. 21 போட்டியாளர்களுடன் களமிறங்கிய இந்த நிகழ்ச்சி தற்பொழுது 16 போட்டியாளர்களை மட்டுமே கொண்டுள்ளது. போட்டியாளர்களுக்கு போட்டி தொடங்கிய முதல் நாளிலிருந்து கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
போட்டியாளர்களும் சலிக்காமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து டாஸ்குகளிலும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். தொடர்ந்து போட்டியாளர்கள் இடையே சண்டைகளும் நடந்து கொண்டே தான் வருகிறது. எப்பொழுது எது நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் பிக் பாஸ் வீடு தற்போது மர்மங்கள் நிறைந்து, பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது பிரமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் அரசாங்க நகைகளை சிவின் திருடி ஒளித்து வைத்து விடுகிறார்.
இதனை கண்டுபிடித்த தனலட்சுமி உடனே ‘இளவரசே! ராஜா ராணி உடனே கூப்பிடுங்கள்’ என்று கூறி கத்துகிறார். பின்னர் அந்த நகைகள் கைப்பற்றப்படுகின்றது. இவ்வாறு இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ வெளிவந்து வைரலாகி வருகிறது.
இதோ அந்த ப்ரோமோ….