உங்க வீட்டில் துணி துவைக்குற வேலை இருந்தால் அழைத்து செல்லவும்… இந்த குரங்கு செய்யுற வேலையைப் பாருங்க… குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான்னு நீங்களே சொல்லுவீங்க..!

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் உதவிக் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது.

அந்தவகையில் இங்கே ஒரு குரங்கும் செமத்தியாக வீட்டு வேலை செய்கிறது. மனிதர்களைப் போலவே அந்த குரங்கு மிக அழகாக துணி துவைக்கிறது. அதுவும் சோப்பு போட்டு செம நேர்த்தியாக துணி துவைக்கிறது. அதைப் பார்த்த மக்கள் ஆஹா, இந்தக் குரங்கை நம்ம வீட்டுக்கு நான்கு நாள்களுக்கு வேலைக்கு வரச்ச்சொல்லுங்கப்பா என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *