தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் தான் நடிகை வனிதா. கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னாள் பீட்டர் பாலை பிரிந்தார் வனிதா. தற்போது அதிலும் மீண்டு வந்த வனிதா அட்டகாசமாக மேக்கப்புடன் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றார்.
கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் நடுவராகவும், சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். வனிதாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். உடல் எடையை பயங்கரமாக குறைத்த வனிதாவிற்கு தற்போது அதிக அளவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு படத்தில் ஹீரோயினாகவும், மற்றொரு படத்தில் சிவ நாடாருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
இப்போது 90 களில் பிரபல ஹீரோவாக இருந்த பிரசாந்த், தனது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு நடிக்க வந்துள்ள அந்தகன் படத்திலும் நடிக்க புக் ஆகி உள்ளார். இது இந்தியில் வெளிவந்த அந்ததுன் படத்தின் ரீமேக். இதில் கார்த்திக், சிம்ரன், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது. இதனால் வனிதா ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
View this post on Instagram