‘உன்னை ஒன்னும் செய்ய மாட்டா…என்ன கொன்னுடுவா’… தனது நாயுடன் தனியாக இருக்கும் ரவிந்தர் போட்ட கலக்கல் பதிவு… குழப்பத்தில்  ரசிகர்கள்…

தயாரிப்பாளர் ரவீந்தர் தனது நாய் குட்டியுடன் புகைப்படத்தை வெளியிட்டு தற்பொழுது பதிவு ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகை மகாலட்சுமியும்  தயாரிப்பாளர் ரவீந்தரும் செப்டம்பர் 1ஆம் தேதி திருப்பதியில்  திருமணம் செய்து கொண்டனர். இதே மாதத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபல நட்சத்திரம் நயன்தாராவின் திருமணம் கூட அதிக அளவில் பேசப்படவில்லை. இவர்களது திருமணம் அந்த அளவுக்கு பிரபலமானது. இவர்களின் திருமணம் மூலம் இவரை உருவகேலி செய்தவர்கள் ஏராளம்.

   

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் தான் ரவீந்தர். இவர் பல படங்களை தயாரித்துள்ளார். மகாலட்சுமி சின்னத்திரை சீரியலில் நடிகையாக நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான்.

விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த இருவரும் இரண்டு ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பின்னர் பல சர்ச்சைகளும் பிரச்சனைகளும் தொடர்ந்து நடைபெற்றது. இருப்பினும் இவர்கள்  எதையும் கண்டு கொள்ளாமல் தங்களுடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

தனது வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் ரவீந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து விடுவார். அந்த வகையில் தற்பொழுது அவர் தனது நாய்க்குட்டி உடன் வீட்டில் பெட்டில் படுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘நான் வாட்டர்பேட் இல்லை “மைலோ” ..அவ பார்த்தா கொன்னுடுவா…உன்னை இல்லை..என்னை கொன்னுடுவா” என்று கிண்டலாக பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

இதோ அந்த பதிவு….