நடிகை காஜல் அகர்வால் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கார்த்திக், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார்.
இவர் தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது.இவர் திருமணத்திற்கு பிறகு ஆச்சாரியா, இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், விளையாட்டு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதுவரை அந்த குழந்தையின் முகத்தை வெளியே காட்டாமல் இருந்து வந்தார் நடிகை காஜல். இந்நிலையில் சிறுவர் தினத்தை முன்னிட்டு தனது குழந்தையின் புகைப்படத்தை முதல் முதலாக வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார் நடிகை காஜல். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…