“என்னங்க-டா பண்ணிவச்சிருக்கீங்க இவ்ளோ பெரிய நடிகர”…. !! இணையத்தில் வைரல்கும் நடிகர் அஜித் ரசிகர்களின் போஸ்டர்….

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் எச்.வினோத் இயக்கத்தில் அடுத்ததாக ஏகே 61 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இவர் நடிப்பதை தாண்டி , துப்பாக்கி சூடும் பயிற்சியில் கடந்த சில வருடங்களாக இவர் இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்திருப்போம்.

   

இந்நிலையில் நடிகர் அஜித் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சூடும் போட்டியில் கலந்து கொண்டார். அங்கு 47வது மாநிலத் துப்பாக்கிச் சூடு போற்றி நடைபெற்ற நிலையில், 1300 போட்டியாளர்கள் அங்கு கலந்து கொண்டனர். இதற்காக திருச்சி வந்த அஜித் ரசிகர்களை பார்த்து கையெசத்தை நன்றி தெரிவித்தார். மேலும், போட்டியில் நடிகர் அஜித் 4 தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் வென்றார்.

இந்நிலையில் திருச்சிக்கு அஜித் வந்து சென்றதை அடுத்து ரசிகர்கள் ஒட்டியுள்ள பேனர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சுபாஷ் சந்திர போஸ் உடையில் அஜித்தின் புகைப்படத்தை ரசிகர்கள் தயார் செய்து திருச்சியில் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதை நீங்களே கொஞ்சம் பாருங்க…