நடிகர் கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் திருமண பத்திரிகை தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகன் தான் கௌதம் கார்த்திக். இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கடல்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆரம்பத்தில் இவரின் படங்கள் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் திரைத்துறையில் ஜெயிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார் .
சமீபத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருந்து நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இவர் நடிப்பில் வெளியான வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இதை தொடர்ந்து தற்பொழுது கௌதம் கார்த்திக் சிப்பாய், யுத்த சத்தம், செல்லப்பிள்ளை, பத்து தல போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகன் கௌதம் கார்த்திக் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதலிப்பதாக தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இவர்களுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் நவம்பர் 28ல் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.
தற்பொழுது இவர்களது திருமண பத்திரிக்கை என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த திருமண பத்திரிக்கை முழுக்க முழுக்க கையால் எம்ராய்டரி செய்யப்பட்டு காணப்படுகிறது.
இதோ அந்த திருமண பத்திரிக்கை….