ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல் ஹீரோ புவிக்கு திருமணம் முடிஞ்சாச்சு! வெளியான அழகிய திருமண புகைப்படம்

வெள்ளித்திரையில் வெளியாகும் திரைப்படங்களுக்கு போட்டியாக சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் நாடகங்கள் வந்த வண்ணம் உள்ளது. வேறு மொழிகளில் இருந்து டப் செய்து தமிழில் படங்கள் மற்றும் நாடகங்கள் எடுக்கப்பட்டு வந்தன. இப்போது அதைத்தாண்டி வேறு ஒரு சேனலில் ஒளிப்பரப்பாகும் தொடரை அப்படியே பெயரை மாற்றி எடுத்து வருகின்றனர். அந்த வைகையில் ஜீ மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் டப் செய்த சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று ஓடுகிறது.

   

இந்நிலையில் சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர்கள், நடிகைகளுக்கு திருமணம் நடந்து வருகின்றன. அவர்கள் சினிமா அல்லாத மற்ற துறை சார்ந்தவர்களையும் திருமணம் செய்து கொள்கிறார்கள், என்று சொல்லலாம். இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் “ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி” என்ற தொடர். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது இந்த சீரியல்.

இதில் கதாநாயகியாக அஷ்வினி என்பவர் நடிக்க புவி என்பவர் கதாநாயகனாக நடித்து இருவரும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் “ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி” சீரியல் ஹீரோ புவிக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது. ஆம் அவரின் திருமணத்திற்கு சென்ற ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து, அழகிய திருமண ஜோடிகளுடன் புகைப்படம் எடுத்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்…