ஒரு மணி நேரத்தில் 73 ஆயிரம் கோடியை இழந்த உலகின் மிகப் பெரும் பணக்காரர் கவுதம் அதானி : எப்படி தெரியுமா?

இந்தியாவில் மிகப் பெரும் பணக்காரரான கவுதம் அதானி ஒரு மணி நேரத்தில் 73,250 கோடி இழப்பு ஏற்பட்டதால் ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை இழக்கும் நிலையில் உள்ளார்.

   

ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி 2-வது இடத்தில் உள்ளார். இவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு 5.64 லட்சம் கோடியாகவும், அதானி குழுமங்களின் மொத்த சந்தை மூலதனம் 9.5 லட்சம் கோடியாகவும் உள்ளது.

இந்நிலையில், அதானியின் கிரீன் எனர்ஜி, டிரான்ஸ்மிஷன், எரிவாயு உள்ளிட்ட அதானி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட், ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் 43,500 கோடி மதிப்பிலான கணக்குகளை தேசிய பிணையம் வைப்பக நிறுவனம் முடக்கியது.

இதனால் தேசிய பங்கு சந்தையில் முந்தைய நாள் வர்த்தக முடிவில் 1601.60 ஆக இருந்த, இந்த பங்கின் விலை நேற்று 91 குறைந்து, 1,510.35-ஆக சரிந்தது. இதன் மூலம், அதானி சொத்து மதிப்பில் 73,250 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், ஆசியாவின் 2வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.