பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை சுஜிதா அவர்கள். குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகம் ஆன இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் தற்போது பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்” என்ற தொடரில் நடித்து வருகிறார் ,
மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை சுஜிதா அவர்கள். தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. மேலும், இவர் தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் புகழ் நடிகை சுஜிதா அவர்கள் தன்னுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணனோடு நடனமாடிய காணொளியானது தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது , இதோ அந்த காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,