கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனருக்கு திருமணம் முடிஞ்சாச்சு!! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்

தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட இயக்குனர் அகத்தியனின் அவர்கள். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். முத்த மகள் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கனி. இரண்டம் மகள் நடிகையை விஜயலக்ஷ்மி. மூன்றாம் மகள் நடிகை நிரஞ்சனி. இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிரஞ்சனி.

அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. நடிகை நிரஞ்சனியும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும், அவர்களது திருமணம் இன்று காலை பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அவர்களது திருமண புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். அதில் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. இதோ அழகிய திருமண ஜோடியின் புகைப்படங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *