நடிகை நித்யா மேனன் வயிற்றில் குழந்தை இருப்பது போல புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை நித்யா மேனன் ‘180’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளின் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி ,24, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
தளபதி விஜயுடன் ‘மெர்சல்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தது, தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த மிகப் பெரிய ரீஎண்ட்ரி என்று அவரே குறிப்பிட்டு இருந்தார். சமீபத்தில் இவர் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது.
இந்நிலையில் நடிகை நித்யா மேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் கருத்தரிப்பு சோதனை செய்யும் கருவி, குழந்தைகளுக்கான நிப்பிள் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவர் கர்ப்பமாக உள்ளார் என்று எண்ணி வாழ்த்துக்களை கூற தொடங்கினார்.
ஆனால் இப்புகைப்படங்கள் பட ப்ரோமோஷன்காக என்பதை பின்னர் தான் ரசிகர்கள் தெரிந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தற்பொழுது அவர் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் வயிற்றில் குழந்தை இருப்பது போல கர்ப்பகால புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
ஆனால் இந்த புகைப்படங்களும் பட ப்ரோமோஷன்காக என்பதும் தற்பொழுது தெரியவந்துள்ளது. மேலும் அதில் அவர்,I absolutely LOVED and had sooo much fun playing Nora … will be sharing lots of adorable pictures from behind the scenes .Note : I am not REALLY pregnant என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வைரலாகும் பதிவு இதோ…
View this post on Instagram