சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கயல்’ சீரியலில் கயலின் கடைசி தங்கையாக ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை அபிநயா தற்போது தனது வளைகாப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் டிஆர்பியில் முன்னணியில் இருந்து, ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான். இந்த சீரியலின் கதாநாயகியாக சித்ரா ரெட்டி நடித்து வருகிறார்.
இவருக்கு ஜோடியாக கதாநாயகனாக களமிறங்கி நடத்தி வருபவர் சஞ்சீவ். கயலின் தங்கையாக நடிகை அபிநயா நடித்து வருகிறார். சீரியலில் அபிநயாவுக்காக கயல் படும் கஷ்டங்கள் ஏராளம். அதனால் ரசிகர்கள் மத்தியில் கயலுக்கு அனுதாபங்கள் கூடிக் கொண்டிருக்கிறது.
நடிகை அபிநயா இந்த சீரியல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டுள்ளார். கர்ப்பமாக இருக்கும் இவர் அதை மறுத்துக் கொண்டுதான் சீரியலில் நடித்து வந்துள்ளார். இவர் ‘ஈரமான ரோஜாவே ‘ சீரியலில் நடித்து வரும் தீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் சீரியல்களில் தொடர்ந்து நடித்த வண்ணமே இருந்தனர். சமீபத்தில் நடிகை அபிநயா தனது instagram பக்கத்தில் தன்னுடைய பிரசவ புகைப்படத்தை வெளியிட்டு தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை அபிநயாவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்து முடிந்தது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். கயல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் அபிநயா இந்த சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வியும் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.