கலா மாஸ்டரின் மகன் இவரா .? அவர் செய்த செயலினால் உச்சகட்ட மகிழ்ச்சியில் கலா மாஸ்டர் ..

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் நடன இயக்குனர் கலா மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் கலா மாஸ்டர் நடித்து அசத்தியுள்ளார்.

   

இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ICSE தேர்வில் மகன் தேர்ச்சி பெற்றதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதில், “எனது மகன் ICSE தேர்வில் A கிரேடில் தேர்ச்சி பெற்றுள்ளான் என்பதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்”என்று உச்சகட்ட மகிழ்ச்சியில் கலா மாஸ்டர் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கலா மாஸ்டரின் மகனுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.