கல்யாண வீட்டில் செம ஆட்டம் போட்ட தோழி… என்ன அழகான நடனம் பாருங்க…!

திருமண வீடுகள் என்றாலே உறவினர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் ஹாட் ஸ்பார்ட். இப்போது கொரோனா காலம் என்பதால் திருமணங்கள் மிகவும் சிம்பிளாகவே நடந்து வருகிறது. இருந்தாலும் நெருங்கிய உறவினர்களை அழைக்கத் தவறுவதில்லை.

   

என்னதான் திருமணங்களில் மாப்பிள்ளை, பெண் தான் முக்கியஸ்தர் என்றாலும் சொந்தங்கள் சூழும்போது அது தரும் மகிழ்ச்சியே தனி தான். வசீகரா படத்தில் வரும் மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல பாடல் திருமண நாளில் சொந்தங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசும்.

இங்கேயும் அப்படித்தான் ஒரு கல்யாண வீடு களை கட்டி இருந்தது. சொந்த, பந்தங்கள் எல்லாம் திரண்டு வந்திருந்தனர். அப்போது, மணப்பெண் மேடையில் இன்னும் வந்து சேரவில்லை. ரிசப்சனுக்கு மாப்பிள்ளை மட்டுமே வந்து அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த மாப்பிள்ளையின் உறவுக்கார இளைஞரும், இளம் பெண்ணும் சேர்ந்து பட்டையைக் கிளப்பும்வகையில் செம ஆட்டம் போட்டனர். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.