கழிப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்! குடும்பத்தாரின் கொடூர செயல்.. அம்பலமான பகீர் பின்னணி!!

கொரோனா அச்சம் காரணமாக 95 வயதான பெண் கழிப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராதா (95). இவரது கணவர் போலீஸ்காரராக இருந்து ஓய்வு பெற்றவர்.

   

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ராதாவுக்கு 4 மகன்கள் இருந்த நிலையில் இருவர் இறந்துவிட்டனர். இதையடுத்து கடைசி மகன் ஸ்ரீதர் வீட்டில் அவர் வசித்து வந்தார். இந்த நிலையில் ஸ்ரீதர், அவர் மனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அனைவரும் தனியார் மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றனர்.

நேற்று ஸ்ரீதர் வசித்த வீட்டின் பின்புறத்தில் இருந்து பெண் ஒருவர் அழுவது கேட்டது. அங்கு அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது ராதா வீட்டின் கழிப்பறையில் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஸ்ரீதர் குடும்பத்தார் ராதாவை கழிப்பறையில் தங்க வைத்ததாக தெரிகிறது.

பின்னர் தகவலின் பேரில் அங்கு வந்த பொலிசார் மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தினர் ராதாவை மீட்டு அழைத்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.